இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்ட 200,000 மூத்தோரைச் சென்றடைவதற்கான பெருமுயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருவது குறித்து, நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
மூத்தோர் தங்களுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள எந்தவொரு பலதுறை மருந்தகத்திற்கோ தடுப்பூசி நிலையத்திற்கோ சென்றால் போதும். முன்பதிவு ஏதும் தேவையில்லை.
வீட்டைவிட்டு வெளியேற சிரமப்படுவோருக்கு வசதியாக, சுகாதார அமைச்சு, நடமாடும் தடுப்பூசிக் குழுக்களைக் குடியிருப்புப் பேட்டைகளில் பணியமர்த்தியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வது நம்மையும் நமது அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதுடன், புதிய இயல்புநிலைக்கு நம்மை இட்டுச் செல்லும். இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர் யாரையேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், அன்புகூர்ந்து எனது காணொளிச் செய்தியை அவர்களிடம் காட்டுங்கள். – LHL
#SGUnited
(PMO Video by Alex Qiu and Chiez How)